LOADING

Type to search

உலக அரசியல்

இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதறல்

Share

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருக்கும் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எரிமலையை சுற்றி 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எரிமலை வெடித்ததால், அருகில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், எரிமலை வெடிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறுவது இந்த மாதத்தில் இது 2வது முறையாகும்.