LOADING

Type to search

இந்திய அரசியல்

“மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரமில்லை” – ப.சிதம்பரம்

Share

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து முழுமையாக 365 நாட்கள் கடந்தும், மணிப்பூருக்குச் செல்வதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரம் கிடைக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: “மே 3, 2023 மணிப்பூரில் வெடித்த கலவரத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று. இன்றோடு முழுமையாக 365 நாட்கள் கடந்துவிட்டன; இன்னும் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்குச் செல்லவதற்கு விருப்பமோ அல்லது அதற்கான நேரத்தையோ இதுவரை கண்டுபிடிக்கவில்லை போலும். மணிப்பூா் வன்முறையில் பிப்ரவரி 2024 வரை 219 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் வாழ்கின்றனர். வீடுகள் இடிக்கப்பட்டன மற்றும் வழிபாட்டுத் தலங்கள் – கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. மணிப்பூர் இன்னமும் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசாங்கத்தால் மேம்போக்காக ஆட்சி செய்யப்பட்டு வருகிறது. மோடியின் அரசாங்கம் மணிப்பூரின் திசையைப் பார்க்கவோ அல்லது பதற்றமான மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவரவோ மறுத்து விட்டது. இதற்கிடையில், மணிப்பூர் மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகின்றனர். மணிப்பூர் மக்களுக்காக நான் வருந்துகிறேன்.”

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.