LOADING

Type to search

இந்திய அரசியல்

பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை!

Share

பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

   கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் இரண்டாவது கட்டமாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனிடையே தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆபாச காணொளிகள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டிலிருந்து கணினி, மடிகணினி ஆகியவற்றை புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும், சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா வீட்டுக்கு வரவழைத்து, அவர்களிடம் விசாரணை நடத்தி பதிவு செய்து வருகிறார்கள்.