கனடாவில் சில தொகுதிகளில் தேர்தல் மே12ம் திகதி நடைபெறும் – தலைமைத்தேர்தல் ஆணையாளர்
Share
அன்பார்ந்த கனடா வாழ் தமிழீழ மக்களே!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையாளரான ரஞ்சன் மனோரஞ்சன் ஆகிய நானும் ,கனடாத் தேர்தல் ஆணையாளர் சிவபாலன் பாலசுந்தரம் மற்றும் நாடுகடந் தமிழீழ அரசாங்க முறையீட்டு ஆணைக்குழுவின் தலைவர் அனான்பொன்னம்பலம் ஆகிய மூவரும் இன்று (06/05/2024) அவசர சந்திப்பினுடாக பின்வரும் தீர்மானத்தை இணைந்து எடுத்துள்ளோம்.
தேர்தல் முறையீட்டு ஆணைக் குழுவின் முடிவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கதின் தேர்தல் ஆணையகத்தின் இறுதி முடிவாகும். அதாவது, கனடா தேர்தல் ஆணையகத்தினால் நிராகரிக்கப்பட்ட பத்து வேட்பளார்களின் விண்ணப்பங்களை மீளப்பெற்று,அவர்கள் பிரதிநித்துவப் படுத்தும் தொகுதிகளில் தேர்தல்கள் மே 12, 2024இல் நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் உங்களது வாக்குகளை தவறாது செலுத்தி ஒத்துழைக்குமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முறையீட்டு சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கை : https://www.einpresswire.com/article/708745446/
நன்றி.
ரஞ்சன் மனோரஞ்சன்
தலமைத்தேர்தல் ஆணையாளர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்