LOADING

Type to search

இந்திய அரசியல்

இடைக்கால ஜாமின் பெற்ற கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகம் செல்லக்கூடாது – நீதிமன்றம் நிபந்தனை

Share

டில்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்ட அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேர்தல் காரணமாக முன்ஜாமின் வழங்கப்படலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில்தான் மக்களவை தேர்தலின் ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உத்தரவில் உச்சநீதிமன்றம் நிபந்தனைகளை விதித்துள்ளது.

அதன்படி, இடைக்கால ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகம், தலைமைச் செயலகம் செல்லக் கூடாது. தேவைப்படும் பட்சத்தில் துணை நிலை ஆளுநர் ஒப்புதலுடன் கெஜ்ரிவால் கோப்புகளில் கையெழுத்திடலாம். டில்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான சாட்சிகளிடம் பேசக் கூடாது. டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அவரது பங்கு குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கக்கூடாது. இடைக்கால ஜாமின் தொகையாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.