LOADING

Type to search

இந்திய அரசியல்

கெஜ்ரிவாலை பதவி நீக்கக் கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!

Share

கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதால் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

     டில்லி அரசின் மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால பிணையில் தற்போது உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தலுக்காக பிணையில் வெளிவந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், டில்லி முதலமைச்சர் பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்குவது தொடர்பான மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனுவானது விசாரணைக்கு வந்த போது பதவியிலிருந்து நீக்க சட்டப்பூர்வமா உரிமை இல்லை என்று நீதிபதிகள் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தோடு மனுதாரருக்கு ரூ.50,000/- அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.