கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளை குறைத்தது தொடர்பாக பதிலளிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Share
புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளின் நேரத்தை குறைத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் புதுச்சேரி அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிஏ, பிஎஸ்சி, பி.காம் போன்ற பட்டப்படிப்புக்களில் நான்கு
செமஸ்டர்களிலும் பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் பாடம், தற்போது இரண்டாவது மற்றும் நான்காவது செமஸ்டர்களில் மட்டும் கற்றுக் கொடுக்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் அதன் நிறுவனர் சுவாமிநாதன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், தமிழ் மொழி பயிற்றுவிக்கும் நேரம் வாரத்திற்கு நான்கு மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் 4 செமஸ்டர்களுக்கு மொழி பாடம் நடத்தப்படும் நிலையில், புதுச்சேரியில் இரு செமஸ்டர்கள் மட்டும் தமிழ் மொழி பாடம் நடத்தப்படுவது மாணவர்களின் அடிப்படை உரிமையை பாதிப்பதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே 2023 – 24 ம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு பழைய நடைமுறையை
பின்பற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி புதுச்சேரி அரசுக்கும், புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.