LOADING

Type to search

இந்திய அரசியல்

“அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது” – ராகுல் காந்தி!

Share

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், பிரியங்காவும் காரில்  பயணித்தபடியே தங்கள் குழந்தைப் பருவ நிகழ்வுகளை நினைவுகூர்ந்து வித்தியாசமாக வாக்கு சேகரித்தனர்.

  மக்களவை 5-ஆம் கட்டத் தேர்தலையொட்டி, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி, லக்னோ உள்பட 49 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வயநாட்டை தொடர்ந்து ரேபரேலியிலும் போட்டியிடுகிறார். இந்நிலையில், அரசியலில் சிறுவயதிலிருந்தே ஆழ்ந்த உறவு தனக்கும் பிரியங்கா காந்திக்கும் இருந்து வருவதாகவும், ஆனால் தங்கள் இருவரின் உறவுக்கிடையே எப்போதும் அரசியல் புகுந்தது இல்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: “ரேபரேலியில் தானும், தமது சகோதரி பிரியங்கா காந்தியும் குழந்தைப் பருவத்தில் சுற்றித் திரிந்த தெருக்களில் இப்போதும் சிறிது நேரம் உலாவியதாக குறிப்பிட்டு பற்பல இனிமையான நினைவலைகள் உள்ளது. குறிப்பாக, தங்களுடைய பாட்டி (முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின்) ஞானம், தந்தைக்கு பிடித்த இனிப்புகள், பிரியங்கா காந்தி கேக்குகளை உருவாக்கிய கொடுப்பார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கும்,நாட்டை வழிகாட்டுவதிலும் ரேபரேலிக்கு முக்கிய பங்கு உள்ளது. நெடுங்காலமாக உத்தரபிரதேசத்தின் அரசியல், சித்தாந்த மையமாக ரேபரேலி திகழ்கிறது. நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் வழிகாட்டியதும் ரேபரேலி தான். ரேபரேலி நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி காட்ட வேண்டும். மேலும், அரசியல் சேவையாற்றுவோர், தங்கள் குடும்பத்தை மதிக்கவில்லையெனில், குடும்பத்துடன் சுமூகமான உறவை தொடர முடியவில்லையெனில், குடும்பத்திற்கு வெளியிலும் நல்லுறவைப் பேண முடியாது. அன்றாட வாழ்க்கையில் நீங்கள் பொய் சொன்னால், அரசியலிலும் பொய்களை உரைப்பீர்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.