LOADING

Type to search

இந்திய அரசியல்

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜூன் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Share

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை ஜூன் 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கர் 2.5 கிலோ கஞ்சா

வைத்திருந்தகார அவர் உட்பட 4 பேர் மீது பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி

செங்கமலசெல்வன் உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் இரண்டு நாட்கள் சவுக்கு சங்கரை தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி காவல்துறையினர் காவல்துறை காவலில் விசாரித்தனர்.காவல்துறை காவல் விசாரணை நிறைவுற்றதை அடுத்து சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

காவல்துறை காவல் விசாரணையின் போது காவல்துறையினர் என்னை துன்புறுத்தவில்லை, உணவு, தங்குமிடம் வழங்கினார்கள். வழக்கறிஞர்கள் என்னை நேரில் சந்தித்தனர் என நீதிமன்ற கேள்விகளுக்கு சவுக்கு சங்கர் பதிலளித்தார். இதனையடுத்து கஞ்சா வழக்கில் 2 ஆம் முறையாக ஜீன் 5 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவு பிறப்பித்தார்.