LOADING

Type to search

உலக அரசியல்

பப்புவா நியூ கினியா: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 300 ஆக அதிகரிப்பு

Share

பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு நேற்று கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர். இதையடுத்து, அங்கு விரைந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக வெளியான தகவலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது என உள்ளூர் ஊடங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக, எங்கா மாகாணத்தில் உள்ள லகாயிப் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அய்மோஸ் அகேம் கூறுகையில், இந்த நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் மற்றும் 1,182 வீடுகள் புதையுண்டன என தெரிவித்தார். நிலச்சரிவில் சிக்கி மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.