LOADING

Type to search

உலக அரசியல்

பாகிஸ்தான் பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து 8 பேர் பலி

Share

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் சங்லா மாவட்டத்தை சேர்ந்த ஒரேகுடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 8 பேர் நேற்று ஜீப்பில் உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். உறவினர்களை சந்தித்துவிட்டு அனைவரும் ஜீப்பில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஜீப்பில் பயணித்த 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, விரைந்து வந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.