LOADING

Type to search

உலக அரசியல்

நிலவில் மாதிரிகளை சேகரித்தது… பூமிக்கு வரும் சீன விண்கலம்

Share

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை முதன்முறையாக தரையிறக்கி இந்தியா கடந்த ஆண்டு சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து சாங்கே-6 என்ற செயற்கைகோளை நிலவின் தென்துருவத்துக்கு சீனா அனுப்பியது. இந்த செயற்கைகோளின் விண்கலம் கடந்த 2-ந்தேதி அன்று நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த சாங்கே-6 விண்கலமானது நிலவில் இருந்து பாறைகள் மற்றும் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்டது. இதற்காக அந்த விண்கலத்தின் எந்திரம் கடந்த இரு நாட்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது. இந்தநிலையில் மாதிரிகளை சேகரித்த சாங்கே-6 விண்கலத்தின் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் இருந்து புறப்பட்டு அதன் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது. இது வருகிற 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.