LOADING

Type to search

இந்திய அரசியல்

குவைத் தீ விபத்தில் தப்பித்த விருதுநகர் இளைஞர் பேட்டி

Share

குவைத்தில் நடந்த கோர தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக் உயிர் பிழைத்த தமழகத்தின் விருதுநகர் இளைஞர் மணிகண்டன் பேட்டியளித்துள்ளார். “நான் குவைத்தில் பணிபுரிந்து வருகிறேன். குவைத்தில் எப்போதுமே பகலில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், இரவு நேர வேலைக்குதான் பலரும் செல்வார்கள். இரவு வேலையை முடித்துவிட்டு விடிகாலை வீட்டுக்கு வந்து சமைத்து சாப்பிட்டுவிட்டு தூங்குவார்கள். அப்படித்தான் சிலர் விடிகாலை சமைத்துள்ளனர். இந்த கட்டிடத்தின் அடித்தளத்திலேயே சமயலறை உள்ளது. இங்கிருந்தே தீ எல்லா இடங்களுக்கும் பரவியிருக்கிறது. அதிகாலை நேரம் என்பதால் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த பலர் மூச்சுத்திணறி இறந்துவிட்டனர்.சிலர் தப்பிக்க நினைத்து மாடிகளில் இருந்து குதித்ததால் உயிரிழந்து விட்டனர். இங்குள்ள அறைகளில் தங்கியிருந்தவர்கள் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்… தமிழர்களும் இந்த கட்டிடத்தில் தங்கியிருந்தனர் எனக் கூறியுள்ளார். தீ விபத்தில் உயிர் தப்பிய தொழிலாளி ” புகை சூழ்ந்திருந்ததை பார்த்ததுமே உடனடியாக முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வெளியேறிவிட்டோம்.. பலருக்கு மூச்சுத்திணறல் வந்துவிட்டதால் தப்ப முடியவில்லை” என்கிறார்