LOADING

Type to search

இந்திய அரசியல்

சுவை பனிக்கூலில் (ஐஸ் கிரீம்) மனித விரல் – உணவு பாதுகாப்புத்துறை கடையின் உரிமத்தை நீக்கியது

Share

மும்பையில் உள்ள மலாடில் வசிக்கும் ஓர்லெம் பிரெண்டன் செர்ராவ் (27) என்ற மருத்துவர், தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஆர்டர் செய்த பட்டர் ஸ்காட்ச் பனிக்கூலை சாப்பிட்ட போது ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்தார். அவர் கூர்ந்து கவனித்தபோது, அதற்குள் ஒரு மனித விரல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அவர் அப்பனிக்கூல் பற்றி மலாட் காவல் நிலையத்தில் புகாரளித்தார். உணவுக் கலப்படம் மற்றும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக அந்த தனியார் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசார் பனிக்கூலை விசாரணைக்கும், மனித விரலை தடயவியல் ஆய்வுக்கும் அனுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் பனிக்கூழ் நிறுவனத்தின் உரிமத்தை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இடைநீக்கம் செய்துள்ளது. இருப்பினும், தடயவியல் ஆய்வகத்தின் அறிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது. சம்மந்தப்பட்ட நிறுவனம் புணேவின் இந்தாபூரில் உள்ளது என்றும் அது மத்திய உரிமம் பெற்றுள்ளது என்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. ம்மேலும் ஐஸ்கிரீம் விற்பனையாளரின் வளாகத்திலிருந்து மாதிரிகளும் விசாரணைக் குழுவால் சேகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.