LOADING

Type to search

உலக அரசியல்

டோங்காவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

Share

பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கா. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. இந்நிலையில், டோங்கா தீவின் ஹிஹிபா நகரில்  காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான ஹிஹிபா நகரில் இருந்து தென்மேற்கே 87 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.