கனமழையால் வெள்ளம் – வங்காளதேசத்தில் 20 லட்சம் மக்கள் பாதிப்பு
Share
வங்காளதேசத்தில் கோடைகாலத்தில் பெய்யும் பருவமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக அதிகப்படியான சீரற்ற மழைப்பொழிவு ஏற்படுகிறது. இமயமலை மலைகளில் பனிப்பாறைகள் உருகி வெள்ளம் ஏற்படுகிறது. இந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாக முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரைகளில் வசிக்கும் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தங்குமிடங்களைத் திறந்துள்ளதாகவும், நாட்டின் வடக்குப் பகுதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் வடக்கு பகுதியில் வெள்ளம் இன்னும் அதிகமாகும் என பேரிடர் மேலாண்மை அமைச்சக செயலாளர் கம்ருல் ஹசன் தெரிவித்தார்.