LOADING

Type to search

இந்திய அரசியல்

கேரளத்தின் விழிஞ்ஞம் வர்த்தகத் துறைமுகத்திற்கு 2000க்கும் அதிகமான கன்டெய்னர்களுடன் வந்த முதல் கப்பல்

Share

கேரள மாநிலம் விழிஞ்ஞம் வர்த்தக துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து 2000க்கும் அதிகமான கன்டெய்னர்களுடன் வந்த முதல் தாய் கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் சர்வதேச வர்த்தக துறைமுகம் கட்டும் பணிகள் கடந்த 2015 ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கின . இது இந்தியாவின் முதல் ஆழ்கடல் கன்டெய்னர் வர்த்தக துறைமுகம் ஆகும்.

ரூ. 8, 8677 கோடி செலவில் அதானி குழுமத்துடன் இணைந்து கேரள, ஒன்றிய அரசுகள் இணைந்து இந்த துறைமுகத்தை கட்டி உள்ளன .

தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறிவிழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இந்த துறைமுகத்திற்கு முதலில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பெரும்பாலான துறைமுகப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சீனாவில் இருந்து முதல் தாய் கப்பல் இன்று (ஜூலை 11)விழிஞ்ஞத்திற்கு வந்தது. சான் பெர்னான்டோ என்ற இந்த கப்பல் உலகில் 2வது பெரிய கப்பல் நிறுவனமான மெர்சுக்கு சொந்தமானதாகும்.

இதில் 2000க்கும் அதிகமான கன்டெய்னர்கள் உள்ளன. இந்த கப்பலுக்கு கேரள துறைமுகத்துறை அமைச்சர் வாசவன் தலைமையில் உற்சாக வரவேற்க அனுப்பப்பட்டது. கப்பலுக்கு வாட்டர் சல்யூட் அளிக்கப்பட்டது. இந்த கப்பலுக்கு சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. வழக்கமான பரிசோதனைகள் முடிந்த பின்னர் இந்த கப்பலில் உள்ள கன்டெய்னர்கள் ராட்ச கிரேன்கள் மூலம் இறக்கப்படும்.

இதன்பிறகு இந்த கன்டெய்னர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த 2ம் தேதி சீனாவில் உள்ள சியாமென் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இந்த கப்பல் கொழும்பு வழியாக 8 நாளில் விழிஞ்ஞத்தை அடைந்துள்ளது.