LOADING

Type to search

சினிமா

நடிகர்களுக்கு நிதி உதவி வழங்கிய யோகி பாபுக்கு பாராட்டு

Share

தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், சில காலத்திற்கு பின்னர் நாயகனாகவும் நடிக்க தொடங்கியுள்ளார். இவரது முன்னணி நடிப்பில் தர்ம பிரபு, காக்டெய்ல், பண்ணி குட்டி, கூர்க்கா என பல படங்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகர் யோகி பாபு புதிதாக நடிக்க உள்ள படம் ‘கெனத்த காணோம்’. இப்படத்தில் கதாநாயகனான யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு நலிந்த நடிகர்களுக்கு உதவும் வகையில் நிதி உதவி வழங்கியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவரும், நடிகர் சங்க அறக்கட்டளையின் உறுப்பினருமான பூச்சி முருகனிடம் ரூ. 6 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார். திரைப்பட முன்னணி நடிகர் யோகி பாபு இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவித்த வண்ணம் உள்ளது.