LOADING

Type to search

இந்திய அரசியல்

துணை முதல்வர் பதவி – உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

Share

சென்னை தேனாம்பேட்டையில் திமுக இளைஞர் அணி 45-ம் ஆண்டு தொடக்க விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் உங்களின் பொறுப்பு மாற்றப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அவர் கூறுகையில், பொறுப்புகள் மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். துணை முதலமைச்சர் பொறுப்புக்கு வர வேண்டும் என திமுகவினர் பேசி வருகிறார்கள். இளைஞரணி பதவியே மனத்திற்கு மிக மிக நெருங்கிய பொறுப்பு என்று கூறினார்.