LOADING

Type to search

இந்திய அரசியல்

மனுஜோதி ஆஸ்ரமத்தில் ஶ்ரீலஹரி கிருஷ்ணாவின் 55வது கல்கி ஜெயந்தி விழாவும், மத நல்லிணக்க மாநாடும் சிறப்புற நடந்தேறியது

Share

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் அமைந்துள்ளது மனுஜோதி ஆஸ்ரமம். இவ்வாசிரமத்தை நிறுவிய ஶ்ரீலஹரி கிருஷ்ணா அவர்கள் ‘அனைவருக்கும் கடவுள் ஒருவனே’

என்ற தத்துவ கொள்கையை அநேக நாடுகளில் பரப்பியராவார். இவரது கொளகையை ஏற்றுக் கொண்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்தியா மலேசியா லண்டன் அமெரிக்கா பர்மா போன்ற நாடுகளில் ஶ்ரீலஹரி கிருஷ்ணாவின் பக்தர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். இவர்களிடையே சாதி மதம் என்று பிரித்தாளும் குணம் இல்லை. இறைவனின் முன்

அனைவரும் சமமே என்ற கொள்கை பிடிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள். பல கடவுள் கொள்கை நம்பிக்கையாளர்களுடனும் சகோதரத்துடன் பழகுவதற்காக மத நல்லிணக்க மாநாடையும் வருடந்தோறும் நடத்தி வருகிறார்கள். அதற்காக “அனைத்து மதமும் சம்மதம்” என்ற கொள்கை இவர்களிடம் இல்லை. ஆனால் அனைவருக்கும் எல்லா வேதங்களையும்

கொடுத்தது இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டை உடையவர்கள். இவ்வாண்டு நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் இவ்வாசிரமத்தின் தலைவர் பால் உப்பாஸ் லாறி உரையாற்றுகையில்

“இந்த கல்கி ஜெயந்தி விழாவானது 1969-ம் ஆண்டு மனிதன் முதன் முதலில் சந்திரனின் காலடி வைத்த அன்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் அமெரிக்காவில் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அங்கே குழுமி இருந்த மக்கள் அவர் சாதாரண மனிதர் அல்ல. தெய்வாம்சம் பெற்றவர் என்பதை அறிந்து கொண்டார்கள். ஜூலை 21-ம் நாள் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் மகா அவதாரமாக தம்மை உலகிற்கு வெளிப்படுத்திக் காண்பித்தார். அதை நினைவு கூர்ந்து கல்கி ஜெயந்தி விழாவாக கொண்டாடுகிறோம். கடவுள் ஒருவனே என்ற கொள்கையை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அனைத்து மதத்தினரும் ஏக இறைவனையே பின்பற்ற வேண்டும் என்பதே இந்த சர்வ சமய மாநாடு மற்றும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நோக்கமாகும். மதத்தின் பெயரால் பிரிவினைகள் வேண்டாம் என்று உரையாற்றினார்.

அவரை தொடர்ந்து இவ்வாசிரமத்தின் துணைத்தலைவர் லியோ பால் சி.லாறி உரையாற்றுகையில் “சுயநலத்தை வைத்துக்கொண்டு ஒரு எதிர்பார்ப்புடன் தன்னுடைய கடமையை செய்கிறான் மனிதன்” என்று கூறினார். அவர் மேலும் பேசுகையில், “இன்றைக்கு நாம் 55-வது கல்கி ஜெயந்தி விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இந்த சர்வ சமய மாநாட்டில் இரண்டு நூல்கள் வெளியீடு காண்கிறது. ஆனால் நூல்களை படிக்ககூடிய பழக்கம் என்பது மக்களிடையே குறைந்து வருகிறதை நாம் காணமுடிகிறது. இன்றைக்கு இருக்ககூடிய இளைய சமூகத்தினர் நல்ல நூல்கள படித்தால்தான் அநேக நல்ல காரியங்களை தெரிந்துகொள்ள முடியும் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். என்றார். அவசர காலகட்டத்தில் மக்கள் ஒரு இயந்திர வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருப்பது

நாம் காணமுடிகிறது என்று கூறிய லியோ பால் சி. லாறி, ஒருவருக்கொருவார் விட்டுக்கொடுத்து செல்லக்கூடிய ஒரு மனப்பான்மை தற்காலத்தில் இல்லாமல் போய் விடுகிறது என்றார். அநேகர் சண்டைபோட்டுக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது. அதற்கு காரணம் இந்த அவசர வாழ்க்கையில் பொறுமை என்பதை மனிதன் இழந்துகொண்டே வருகிறான். நம்மை நாம் ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொள்ளும்போது கடவுளைக் குறித்த ஒரு பயம் வருகிறது. அந்த பயத்தால் அநேக நற்காரியங்களை இந்த உலகத்தில் செய்ய முடியும் என்று கூறினார்.

மதநல்லிணக்க 55வது மாநாட்டிற்கு மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கி முதல் நூலை வெளியிட, நெல்லை ஷிபா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர். முகமது அராபத் பெற்றுக்கொண்டார். இரண்டாம் நூலை மயன் குரூப் ஆப் கம்பெனியின் இயக்குநர் ரமேஷ் ராஜா வெளியிட, சென்னை வழக்கறிஞர் கருணாநிதி

பெற்றுக் கொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவாசீர் லாறியின் குமாரர்களான பால் உப்பாஸ் லாறி, லியோ பால் சி.லாறி ஆகியோர் செய்திருந்தார்கள்.