LOADING

Type to search

இந்திய அரசியல்

விடுதியில் இளம்பெண் கொலை – கத்தியால் குத்திய நபர் கைது

Share

பெங்களூரு கோரமங்களா வி.ஆர். லே-அவுட்டில் பெண்களுக்கான தங்கும் விடுதியில் வசித்து வந்தவர் கிருதிகுமாரி (வயது 24). எம்.பி.ஏ. பட்டதாரியான அவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்தார். கடந்த 23-ந்தேதி இரவு 11 மணியளவில் தங்கும் விடுதியின் 3-வது மாடிக்கு வந்த ஒரு மர்மநபர் கிருதிகுமாரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கோரமங்களா காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டதுடன், தங்கும் விடுதி, அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அப்போது தங்கும் விடுதியில் உள்ள கேமராவில் கொலையாளியின் உருவம் பதிவாகி இருந்தது. அதன்மூலம் காவல்துறை நடத்திய விசாரணையில், கொலையாளி மத்தியபிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த அபிஷேக் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இளம்பெண்ணை பிடித்து காவல்துறை விசாரித்தனர். அவரிடம் விசாரித்ததில் பல முக்கிய தகவல்கள் காவல்துறைக்கு கிடைத்தது. அபிஷேக்கும், இளம்பெண்ணும் முதலில் பெங்களூருவில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் போது காதல் மலர்ந்துள்ளது. பின்னர் அவர்கள் தனியார் தங்கும் விடுதியில் கணவன், மனைவி போல் வசித்து வந்துள்ளனர்.

கடந்த மாதம் அபிஷேக் வேலையை விட்டு நின்றுவிட்டார். அதன்பிறகு வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்துள்ளார். இதனால் அபிஷேக்கிற்கும், காதலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அபிஷேக்கிடம் இருந்து இளம்பெண் விலகி சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று விடுதி காவலாளி சாப்பிட சென்றபோது உள்ளே புகுந்த அபிஷேக் 3-வது மாடிக்கு சென்றுள்ளார். அங்கு தனது காதலி தங்கியுள்ள அறையின் கதவை தட்டியுள்ளார். அப்போது காதலி வெளியே சென்றிருந்ததால், கிருதிகுமாரி கதவை திறந்துள்ளார். உடனே வாசலில் நின்ற அபிஷேக் தான் வைத்திருந்த கத்தியால் காதலி தான் என நினைத்து கிருதிகுமாரியின் கழுத்தை அறுத்துவிட்டு ஓடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெங்களூருவில் பெண்கள் விடுதிக்குள் புகுந்து இளம்பெண் கொடூரமாக கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட அபிஷேக், மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.