LOADING

Type to search

சினிமா

‘தக் லைப்’ படத்தின் பின்னணி குரல் பணிகளை தொடங்கிய சிம்பு!

Share

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘தக் லைப்’. 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. திரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை, ஜெய்சால்மர் மற்றும் டில்லி போன்ற இடங்களில் நடைபெற்றது. ‘தக் லைப்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சிம்பு, ‘தக் லைப்’ படத்தின் பின்னணி குரல் பணிகளை தொடங்கியுள்ளார்.  மேலும் ஒரே சமயத்தில் படப்பிடிப்பும் பின்னணி குரல் பணிகளும் நடைபெற்று வருகிறது.