போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் அமெரிக்காவில் கைது
Share
மெக்சிகோ சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கூடாரமாக உள்ளது. அதன்படி மெக்சிகோவை தலைமையிடமாக கொண்டு சினோலோவா கார்டெல் என்ற போதைப்பொருள் கடத்தல் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் தலைவன் ஜம்பாடா அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். எனவே இவர் மீது அமெரிக்காவில் ஏராளமான போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. மேலும் அவர் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு சுமார் ரூ.125 கோடி சன்மானம் வழங்கப்படும் எனவும் அமெரிக்க அரசாங்கம் அறிவித்தது. இந்தநிலையில் சினோலோவா கார்டெல் அமைப்பின் தலைவர் ஜம்பாடா மற்றும் ஜோக்வின் குஸ்மான் லோபஸ் ஆகியோரை டெக்சாஸ் மாகாணத்தில் வைத்து காவல்துறை கைது செய்தனர்.