LOADING

Type to search

உலக அரசியல்

வெனிசூலா அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ வெற்றி

Share

வெனிசூலா நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளர் எட்மண்டோ கான்சலஸ் மற்றும் 8 பேர் களத்தில் இருந்தனர். எனினும் நிகோலஸ் மதுரோவுக்கும், எட்மண்டோ கான்சலசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி, வாய்ப்பு தேடி நாட்டை விட்டு வெளியேறும் மக்கள், அரசுக்கு எதிரான அதிருப்தி அலை ஆகிய அம்சங்கள் தேர்தல் பிரசாரத்தில் எதிரொலித்தது. வெளிநாடுகளில் வசிக்கும் வெனிசூலா மக்கள் தாயகம் திரும்பவும் அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைக்கவும் போதுமான வேலைகள் உருவாக்கப்படும் என இரண்டு வேட்பாளர்களும் வாக்குறுதி அளித்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் நிகோலஸ் மதுரோ 51.2 சதவீத வாக்குகள் பெற்றார். எட்மண்டோ கான்சலஸ் 44.2 சதவீத வாக்குகள் பெற்றார். இதனால் மதுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த வெற்றியை மதுரோவின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.