LOADING

Type to search

சினிமா

சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன்?

Share

சிவகார்த்திகேயனின் அமரன் படம் தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் விரைவில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும், சல்மான்கானின் சிக்கந்தர் படத்தையும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும், சுதா கொங்கரா இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படங்களின் பிரீ ப்ரோடக்ஷன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது.

ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை சுதா கொங்கரா உள்ளிட்ட இரண்டு தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுதா கொங்கரா தன்னுடைய மீனாட்சி சினிமாஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தின் தயாரிப்பாளராக இணைந்துள்ளார். இதேபோல கேவிஎன் தயாரிப்பு நிறுவனமும் இந்தப் படத்தை அவருடன் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவுடன் உருவாகவுள்ள இந்தப் படம் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.