ஹமாஸ் இயக்கத் தலைவர் படுகொலை – பதட்டம்
Share
காஸாவைச் சேர்ந்த ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காசாவில் பெரும் உயிர்சேதம் நிகழ்ந்துள்ளது. இந்த சூழலில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார். ஈரான் நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், காசா மீது தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் வைத்து ஹமாஸ் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் தங்கியிருந்த வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரும், அவரது பாதுகாவலர் ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.