நீலகிரி நிலச்சரிவு.? மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விளக்கம்
Share
நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என்ற சமூக வலைதள செய்திகளை நம்ப வேண்டாம் என ஆட்சியர் லட்சுமி திவ்யா தெரிவித்துள்ளார்.
போலியான செய்திகாளை கண்டு மக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் நீலகிரி ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். ஏதாவது சந்தேகம் இருப்பின் 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மாவட்டத்தின் முக்கிய பகுதிகளை இரவு நேரத்தில் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால், நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக இணைய தளத்தில் தகவல் பரவிய நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.