LOADING

Type to search

உலக அரசியல்

‘இஸ்ரேலை தடுத்து நிறுத்தாவிட்டால் ஆபத்து’ – ஈரான் எச்சரிக்கை

Share

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான இஸ்மாயில் ஹனியி (வயது 62) கடந்த புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வீட்டில் இஸ்மாயில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலை தடுத்து நிறுத்தாவிட்டால் மத்திய கிழக்கு பகுதி மட்டுமின்றி, உலகத்திற்கே ஆபத்து என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி பாகரி கனி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; “கடந்த பத்து மாதங்களில், இஸ்ரேல் காசா பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இஸ்ரேலின் குற்றங்கள் பெய்ரூட், தெஹ்ரான் மற்றும் ஏமன் வரை விரிந்துள்ளது. இஸ்ரேலை தடுத்து நிறுத்தாவிட்டால், மத்திய கிழக்கு பகுதியின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி, உலகத்திற்கே ஆபத்தாகும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.