LOADING

Type to search

சினிமா

‘வேட்டையன்’ படத்திற்கான பின்னணி பணிகளை முடித்த துஷாரா விஜயன்!

Share

‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்குப் பிறகு டி.ஜே.ஞானவேல் இயக்கி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த திரைப்படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா தகுபதி, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், சென்னை,மும்பை, ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து வந்த நிலையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில வாரங்களுக்கு முன் முடிந்தது. படத்தின் பின்னணி பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. அண்மையில் வெளியான ‘ராயன்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார் துஷாரா விஜயன். ‘வேட்டையன்’ திரைப்படத்திலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் துஷாரா. ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கான பின்னணி பணிகளை துஷாரா முடித்துள்ளார்.