LOADING

Type to search

இந்திய அரசியல்

கன்னியாகுமரி அருகே காவல்துறை ரவுடியை சுட்டு பிடித்தது

Share

கன்னியாகுமரி அருகே ரவுடி செல்வத்தை காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

      கன்னியாகுமரி மாவட்டம் கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்ற தூத்துக்குடி செல்வம். இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகள் உள்ளன. நாகர்கோவில், அஞ்சுகிராமம், சுசேந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கொலைகள் தொடர்பாக காவல்துறை இவரை தேடி வந்தனர். இருப்பினும் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த சூழலில் அஞ்சுகிராமம் பகுதியில் இவர் மறைந்து இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அஞ்சுகிராமம் காவல் உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ் தலைமையில் காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது ரவுடி செல்வத்தை பிடிக்க முயன்ற போது அவர் காவல் உதவி ஆய்வாளரை கையில் வெட்டினார். இதனையடுத்து உதவி ஆய்வாளர் தற்காப்புக்காக செல்வத்தை துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். தொடர்ந்து ரவுடி செல்வம் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த மருத்துவமனையில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளனர். ரவுடி துப்பாக்கியால் சுட்டி பிடிக்கப்பட்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.