LOADING

Type to search

இந்திய அரசியல்

கோட் படக்குழுவினருடன் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்த விஜய்

Share

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவி பிரேமலதாவை சந்தித்து நடிகர் விஜய் நன்றி தெரிவித்தார். லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர். மேலும் இது விஜய் அரசியலுக்கு வந்தபிறகு வெளியாகும் முதல் படமாகும். ஏற்கனவே இப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியான நிலையில் இப்படத்தின் முன்னோடத்ததிற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துகொண்டு இருந்தனர். தொடர்ந்து, தி கோட் திரைப்படத்தின் முன்னோட்டம் கடந்த 17 ம் தேதி வெளியானது. மேலும், முன்னோட்டத்தை விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இந்த நிலையில், நடிகர் விஜய் சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவி பிரேமலதாவை சந்தித்தார். பின்னர் அவர் விஜயகாந்த் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு, பிரேமலதாவிடம்,  ‘கோட்’ படத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் விஜயகாந்தை பயன்படுத்த அனுமதி அளித்ததற்காக நடிகர் விஜய் நன்றி தெரிவித்தார். திரைப்பட இயக்குநா் வெங்கட் பிரபு, திரைப்பட தயாரிப்பாளா் அா்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.