LOADING

Type to search

சினிமா

வேட்டையன் பட பாடல் வெளியீடு – அனிருத் பதிவேற்றம்!

Share

வேட்டையன் திரைப்படத்தின் பாடல் வெளியீடு குறித்த தகவலை அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அறிவித்துள்ளார்.

‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்குப் பிறகு டி.ஜே.ஞானவேல் இயக்கி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த திரைப்படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா தகுபதி, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், சென்னை, மும்பை, ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து வந்தது. இந்த சூழலில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில வாரங்களுக்கு முன் முடிந்தது. படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வேட்டையன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா ஆகிய மொழிகளில் அக். 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் வேட்டையன் படத்தின் பாடல்கள் குறித்த பதிவேற்றத்தை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வேட்டையன் திரைப்படத்தின் ‘ஹண்டர் வண்டார்’ பாடல் விரைவில் வெளியாகவுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.