LOADING

Type to search

உலக அரசியல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 41 பேர் பலி

Share

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இருந்து 43 பேர் பேருந்தில் நேபாளத்திற்கு 10 நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்றனர். நேபாளத்தின் பொக்காராவில் இருந்து நேற்று காலை காத்மாண்டு நோக்கி பேருந்து சென்றுகொண்டிருந்தது. தனாஹன் மாவட்டத்தில் மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகே சென்றுகொண்டிருந்த பேருந்து, எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், ஆற்றில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் 25 பேர் உயிரிழந்தனர். இதனால், இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேபாளம் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் நடந்த விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.