LOADING

Type to search

உலக அரசியல்

ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் : 3 பேர் உயிரிழப்பு

Share

ஜெர்மனி நாட்டில் சொலிங்ஜென் நகரம் உள்ளது. இந்நகரம் உருவாகி 650 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் சொலிங்ஜென் நகரின் மையப்பகுதியில் உள்ள சதுர்க்கத்தில் நேற்று இரவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 2 ஆண்கள் (வயது 56, 67) மற்றும் ஒரு பெண் (வயது 56) என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நபர் கத்தியால் கழுத்தை அறுத்தும், உடலில் பல பகுதிகளில் குத்தியும் கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறை, காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறை கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். அதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக சிறுவனிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.