LOADING

Type to search

சினிமா

வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் கூட்டணியின் புதிய படம்

Share

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). திரைப்படம் வரும் செப் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படக்குழு முடிந்த அளவுக்கு தொடர்ந்து பதிவேற்றங்களை வெளியிட்டு வருகின்றனர். படத்தின் வித்தியாசமான பாடல் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். படக்குழு மலேசியாவில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டனர். அதில் வெங்கட் பிரபு அடுத்து தான் இயக்க இருக்கும் படத்தை பற்றிய தகவலை கூறினார்.

வெங்கட் பிரபு அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து படத்தை இயக்கவுள்ளதாக கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் அவர் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் நடித்து முடித்தப்பின் இத்திரைப்படத்திற்கான பணிகள் தொடரும் என கூறினார்.