LOADING

Type to search

இந்திய அரசியல்

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: கந்தர்பால் தொகுதியில் உமர் அப்துல்லா போட்டி

Share

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு தற்போது சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி என்று மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 4-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகள் இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது. அதன்படி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடுகின்றன. அதேநேரம் 5 தொகுதிகளில் இரு கட்சிகளும் தனித்து களமிறங்குகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பாந்தர்ஸ் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான 32 பேர் கொண்ட தேசிய மாநாடு கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கந்தர்பால் தொகுதியில் முன்னாள் முதல்-அமைச்சரும், தேசிய மாநாடு கட்சியின் துணை தலைவராக உமர் அப்துல்லா போட்டியிடுகிறார். அதேபோல ஜாதிபாலை தொகுதியில் கட்சியின் மூத்த தலைவர் தன்வீர் சாதிக்கும் போட்டியிடுகிறார்.