LOADING

Type to search

இந்திய அரசியல்

“பிரதமர் மோடி மணிப்பூர் மக்களை பாதுகாப்பதில் தோல்வி” – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

Share

மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த மத்திய அரசு 16 மாதங்களாக எதுவும் செய்யவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

     மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து நடந்து வரும் மெய்டேய் இனத்தினருக்கும் குக்கி இனத்தினருக்கும் இடையிலான தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது ட்ரோன்கள் மூலமாக வெடிகுண்டுகள் வீசப்பட்டும் தாக்குதல் நடக்கிறது. செஞ்சம் சிராங் கிராமத்தில் உள்ள வீடுகளின் மீது, ஞாயிற்றுக்கிழமையில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால், அப்பகுதி மக்கள் வீடுகளில் தக்குவதற்கு அஞ்சி, சுமார் 10 குடும்பங்கள் வரையில் சமூக மண்டபங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில், மணிப்பூரை பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தோல்வியடைந்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: மணிப்பூர் மாநிலம் வன்முறையில் மூழ்கி 16 மாதங்கள் ஆகின்றன. ஆனால், வன்முறையை தடுக்க ’இரட்டை இன்ஜின்’ அரசு எதுவும் செய்யவில்லை. அனைத்து சமூக மக்களிடமும் மணிப்பூரில் அமைதியும் இயல்புநிலையும் திரும்பும் என்ற நம்பிக்கையை விதைக்கும் விதத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.