LOADING

Type to search

இந்திய அரசியல்

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் அப்பாவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Share

சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இவரது பேச்சு அ.தி.மு.க. வின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக கூறி சபாநாயகருக்கு எதிராக, அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி இந்த வழக்கு விசாரணை தொடர்பாக செப்டம்பர் 9-ந் தேதி நேரில் ஆஜராகும்படி, சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் அப்பாவுக்கு, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.