LOADING

Type to search

இந்திய அரசியல்

கனிமொழியின் எம்.பி. வெற்றியை எதிர்த்து மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கலாகியது

Share

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் திமுக அபார வெற்றியை பெற்றிருந்தது. குறிப்பாக தூத்துக்குடி தொகுதி நட்சத்திர தொகுதியாக இருந்தது. இதில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜனும் களமிறக்கப்பட்டிருந்தனர். இப்படி இருக்கையில், இத்தேர்தலில், கனிமொழி 56.77 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். ஆனால், இவர் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதாவது வேட்பாளர் பட்டியலில், தனது கணவரின் வருமானம் குறித்த தகவல்களை கனிமொழி கொடுக்கவில்லை. ஒரு வாக்காளராக இதை தெரிந்துக்கொள்ள வேண்டிய உரிமை தனக்கு இருக்கிறது என்று, சந்தானகுமார் என்பவர் உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த வழக்கு விசாரணையை நிறுத்த கோரியும், மனுவை தள்ளுபடி செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கேட்கப்பட்டுள்ள அனைத்து தரவுகளும் வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் வாக்காளர்கள் நான் வேட்புமனுவில் தெரிவித்துள்ள தரவுகளின் அடிப்படையில் எனக்கு வாக்களித்துள்ளனர். எனவே தன் மீதான வழக்கு விசாரணையை தடை செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சந்தானகுமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஆனால், இந்த உத்தரவை எதிர்த்தும், உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சந்தானகுமார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. வழக்கை நீதிபதிகள், சஞ்சீவ் கன்னா, பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.