LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழ் நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் சாமிநாதன் கூறுகிறார்

Share

தமிழ் திரை உலகில் பாலியல் புகார் தொடர்பாக அதற்கென தனியாக தொலைபேசி எண்வழங்கப்பட்டுள்ளது புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் அமைக்கபட்டு உள்ள கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் நினைவு அரங்கத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் அவர் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இடைசேவலில் பிறந்து அனைவரின்
கவனத்தையும் ஈர்த்தவர். சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர். 100 க்கும்
மேற்பட்ட படைப்புகளை உருவாக்கியவர். சிறந்த சமூகவாதியாக வாழ்ந்து மறைந்த
பெருமையை போற்றுகின்ற வகையில் கோவில்பட்டியில் திருவுருவ சிலையுடன் கூடிய
நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வட்டாரங்களில் உள்ளவர்களும் வெளியூர்களில் இருந்து வரக் கூடியவர்களும் அவரின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ளும் வகையில் பல படைத்த சில நூல்களும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. அண்ணா ,கலைஞர் வழியில் நமது ஸ்டாலின் அரசு இது போன்ற பல்வேறு திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இன்னும் பல்வேறு கோரிக்கைகள் கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. நிதிநிலைக்கேற்ப அரசு நடவடிக்கை எடுக்கும். மணிமண்டபங்களில் உள்ள காலி பணியிடங்கள் அதிகாரியுடன் பேசி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிரந்தர பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

துறை செயலாளர்கள் உயர் அதிகாரிகள் உடன் கலந்து பேசிக் கொள்கிறோம் விரைவில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். பொது இடங்களில் வைக்கப்படும் விளம்பர பேனர்கள் உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறையும், தான் கண்காணிக்க வேண்டும் அந்தந்த நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மலையாள திரை உலகில் ஹேமா கமிட்டி அறிக்கை மூலம் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அதற்கான ஒரு கமிட்டி உள்ளது. அதற்கென தனியாக தொலைபேசி எண் வழங்கப்பட்டு அது குறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் தயாரிப்பளர் இடையே ஏற்படும் பிரச்னை காரணமாக திரைப்படத்திற்கு எந்த தடையும் ஏற்படவில்லை.

சமீபத்தில் கூட விஜய் நடித்து வெளியான திரை படத்திற்கு கூட வழிகாட்டு நெறிமுறை படி அனுமதி வழங்கபட்டு உள்ளது. கலைஞரின் பேனா நினைவுச்சின்னம் பசுமை தீர்ப்பாயம் மற்றும் நீதிமன்ற உத்தரவு விதிகளுக்கு உட்பட்டு நிறுவப்படும். இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.