LOADING

Type to search

உலக அரசியல்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

Share

காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் இஸ்ரேல் ராணுவத்துக்கு, அண்டை நாடான லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் பெரும் தலைவலியாக இருக்கின்றனர். ஹமாசுக்கு ஆதரவாக தினந்தோறும் இஸ்ரேலை இந்த அமைப்பினர் தாக்கி வருகின்றனர். இதனால் இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் லெபனானில் பயன்பாட்டில் உள்ள பேஜர்கள் வெடித்து பெரும் சேதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என கருதப்படுகிறது. பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகளும் பல்வேறு இடங்களில் வெடித்து சிதறின. இதில் தற்போது வரை 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றச்சாட்டு எழும் சூழலில், லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. லெபனானின் தெற்கு பகுதியில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் இந்த வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.