LOADING

Type to search

சினிமா

ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் முன்னோட்டம் நாளை வெளியீடு

Share

‘வேட்டையன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை (அக்.2) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில்,  ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தின் மனசிலாயோ பாடல் அண்மையில் வெளியாகி தற்போது வரை இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஹண்டர் வன்ட்டார்’ என்ற பாடல் கடந்த 20ம் தேதி வெளியாகி கவனம் பெற்றது. முன்னதாக ‘வேட்டையன்’ திரைப்படத்தின் கதாபாத்திரங்களை கடந்த 16ம் தேதி முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்தது. அதன்படி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன், அபிராமி, ரோகிணி ஆகியோரின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், ‘வேட்டையன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை(அக்.2) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.