(29-11-2021) முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுத்துள்ளனர். இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில் பாதுகாப்பைப் பேணுவதற்காக நாட்டின் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ...
(29-11-2021) முல்லைத்தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமான துமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், முல்லைத்தீவு ...
(29-11-2021) பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்ரமரத்ன கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான சாட்சிகளை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.