நடராசா லோகதயாளன் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய சுற்றாடலில் இராணுவத்தினர் பௌத்த விகாரை ஒன்றை கட்டுவது தொடர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நீதிமன்ற உத்தரவையும் மீறி அங்கு கட்டுமானம் நடைபெறுவதை தமிழர் தரப்பு சுட்டிக்காட்டி நீதிமன்றம் சென்றுள்ளது. குருந்தூர்மலை விவகாரத்தில் ...
இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்சனை ’எத்தை தின்னால் பித்தம் தெளியும்’ என்கிற வகையில் பல தசாப்தங்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில், புதிய கருத்து ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது, எல்லைதாண்டிய மீன்பிடித் தொழில் செய்வோரைக் கட்டுப்படுத்த கடற்தொழிற் திணைக்களத்திற்குத் துணையாகத் தொண்டர் அணியை உருவாக்குது தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் ...
(எமது யாழ் செய்தியாளர்.) தமிழகத்தில் இருந்து கச்சதீவு வருகைதரவிருந்த பக்தர்களுடன் விண்ணப்பித்த 8 பி.ஜே.பி உறுப்பினர்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கச்சதீவு புனித அந்தோணியார் உற்சவ்வமானது வியாழன்( 03ஆம் திகதி) ஆரம்பித்து வெல்லிவரை இடம்பெறவுள்ளது. இதற்காக தமிழகம் இராமேஸ்வரத்தில் இருந்து வியாழனன்று 71 படகுகளில் வருகைதர 2 ஆயிரத்து ...