LOADING

Type to search

இந்திய அரசியல்

“எனது பயணத்தில் மக்கள் பிரதிநிதியாக வழிகாட்டியாக இருப்பீர்கள்” – பிரியங்கா கடிதம்!

Share

மக்கள் பிரதிநிதியாக எனது பயணத்தில் நீங்கள் எனக்கு வழிகாட்டிகளாகவும், ஆசிரியர்களாகவும் இருப்பீர்கள் என வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

      கேரளத்தின் வயநாடு எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். வயநாடு தொகுதிக்கு பேரணியாகச் சென்று அக்.23ம் தேதி வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வயநாடு மக்களைவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியுடன், சோனியா காந்தி, கணவர் ராபர்ட் வதேரா, சகோதரர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உடனிருந்தனர். வயநாடு தொகுதியில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாசும், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் சத்யன் மோகெரியும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் வயநாடு மக்களுக்கு பிரியங்கா கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “மக்கள் பிரதிநிதியாக எனது பயணத்தில் நீங்கள் எனக்கு வழிகாட்டிகளாகவும், ஆசிரியர்களாகவும் இருப்பீர்கள். மக்கள் பிரதிநிதியாக எனது முதல் பயணமாக இருக்கும். ஆனால் போராளிக்கான பயணமாக இருக்காது. ஜனநாயகம், நீதி, அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பிரச்னைகளுக்காக போராடுவது தான் எனது வாழ்வின் மையமாக இருக்கும் உங்கள் ஆதரவுடன் எதிர்காலத்திற்காக இந்தப் போரை முன்னெடுத்துச் செல்வதற்கு நான் எதிர்நோக்குகிறேன், நீங்கள் என்னை எம்.பி.யாக்க முடிவு செய்தால் உங்களுக்கு மிகவும் நன்றியுடையவளாக இருப்பேன்”

இவ்வாறு அந்த கடித்தத்தில் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.