இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கடப்பிதழ் தேவையில்லை – தாய்லாந்து
Share
இந்திய சுற்றுலாப் பயணிகள் கடப்பிதழ் இல்லாமல் தாய்லாந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான கடப்பிதழ் இல்லாத நுழைவுக் கொள்கையை காலவரையின்றி நீட்டிப்பதாக தாய்லாந்து அறிவித்துள்ளது. வரும் 11 ஆம் தேதியுடன் கொள்கை முடிவடைய இருந்த நிலையில், தற்போது இந்திய சுற்றுலாப் பயணிகள், தாய்லாந்தில் கடப்பிதழ் இல்லாமல் 60 நாட்கள் வரை தங்கி மகிழலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் குடியேற்ற அலுவலகங்கள் மூலம் இதை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், அதிக இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதுடன், தாய்லாந்தின் சுற்றுலாத்துறையும் மேம்படும் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.