லெபனான் – இஸ்ரேல் நடக்கும் போர் முடிவுக்கு வருகிறது – ஜோ பைடன் அறிவிப்பு
Share
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “இன்று, மத்திய கிழக்கில் இருந்து எனக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. நான் லெபனான் மற்றும் இஸ்ரேல் பிரதமர்களுடன் பேசினேன். மேலும் இந்த செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவுக்கும் இடையிலான பேரழிவுகரமான மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் திட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்” என்று அதில் ஜோ பைடன் பதிவிட்டுள்ளார். தனது மற்றொரு பதிவில், “இன்று எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடக்கும் போர் நாளை முடிவுக்கு வருகிறது. இஸ்ரேல் மற்றும் லெபனான் மக்களுக்கு நீடித்த பாதுகாப்பை போர்க்களத்தில் மட்டும் அடைய முடியாது. அதனால்தான் போர் நிறுத்தத்தை உருவாக்க இஸ்ரேல் மற்றும் லெபனான் அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு எனது குழுவை நான் அறிவுறுத்தினேன்” என்று அதில் ஜோ பைடன் பதிவிட்டுள்ளார்.