LOADING

Type to search

உலக அரசியல்

அதிபர் தேர்தலில் பின்னடைவு: தேர்தல் உரையை ரத்து செய்த கமலா ஹாரிஸ்

Share

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார். டிரம்ப் 247 வாக்குகளும், கமலா ஹாரிஸ் 214 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஸ்விங் மாகாணங்களாக கருதப்படும் 7-ல் இன்னும் ஐந்தில் (பென்சில்வேனியா, விஸ்கான்சின், நெவாடா, மிச்சிகன், அரிசோனா) முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். இங்கு இன்னும் கடும் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றுவிடலாம் என்ற சிறிய நம்பிக்கையில் உள்ளனர். இந்த நிலையில் ஹோவர்ட் பல்கலைகழகத்தில் கமலா ஹாரிஸ் இன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச இருந்தார். தற்போது பின்னதங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்.