LOADING

Type to search

உலக அரசியல்

பென்சில்வேனியா, அலாஸ்கா டொனால்டு டிரம்ப் கைவசம்

Share

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வந்தார். பின்னர் கமலா ஹாரிஸ் இடைவெளியை குறைத்து கடும் போட்டி கொடுத்தார். கலிபோர்னியா (54), வாஷிங்டன் (12) மாகாணங்களில் பெற்றி பெற்றபோது இருவருக்கும் இடையிலான முன்னணி வித்தியாசம் குறைவாக இருந்தது. ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் ஸ்விங் மாகாணங்களில் டொனால்டு டிரம்ப் கை ஓங்கியது. வடக்கு கரோலினா (16), ஜார்ஜியா (16), பென்சில்வேனியா (19) ஆகிவற்றில் வெற்றி பெற்றார். இந்த மூன்று மாகாணங்களில் மொத்தம் 51 எலக்டோரல் வாக்குகள் கிடைத்ததால் தற்போது 267 வாக்குகள் பெற்று கமலா ஹாரிஸை விட 53 வாக்குகள் முன்னிலை பெற்றார். அலாஸ்கா மாகாணத்தில் வெற்றி பெற்று 3 எலக்டோரல் வாக்குகள் பெற்றார். இதன்மூலம் மெஜாரிட்டிக்கு தேவையான 270 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். மிச்சிகன் (15), விஸ்கான்சின் (10), அரிசோனா (11), நெவாடா (6) ஆகிய மாகாணங்களிலும் டொனால்டு டிரம்ப்தான் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் அவர் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.