LOADING

Type to search

உலக அரசியல்

வாகனம் மோதி விபத்தில் சிக்கிய நியூசிலாந்து பிரதமர்

Share

நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் நிதியமைச்சர் நிகோலா வில்லிஸ் ஆகியோரை ஏற்றிச் சென்ற சொகுசு வாகனத்தின் (லிமோசின்) பின்புறத்தில் காவல்துறையின் கார் மோதி விபத்துக்குள்ளானது. நாடாளுமன்றம் அமைந்துள்ள நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் உள்ள விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையில் நேற்று பிற்பகல் சிறிய விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். உள்நாட்டு விவகாரத் துறை, உத்தியோகபூர்வ வாகனங்களை நிர்வகிக்கும் நிறுவனம், சொகுசு கார் பின்புறம் சேதமடைந்ததாக தெரிவித்துள்ளது. இந்த விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் லக்சன் ஆக்லாந்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “விபத்து ஏற்பட்டது அதிர்ச்சி தான். ஆனால் நாங்கள் நன்றாக இருக்கிறார்” என்றார்.